CINEMA
“Dont Touch” என்று சொன்ன அஜித்…. பூதாகரமாக வெடித்த பிரச்சினை…. யோகிபாபுவை கடுமையாக தாக்கிய வலைப்பேச்சு டீம்…!!
நடிகர் யோபு பாபு காமெடி நடிகராக வலம் வந்து நிலையில் நயன்தாராவோடு கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் நடித்துள்ள கோட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் யோகிபாபு மற்றும் அஜித்திற்கு இடையே நடந்த சம்பவம் குறித்து யோகி பாபுவே தங்களிடம் கூறியதாக வலைப்பேச்சு டீம் பரபரப்பை கிளப்பி உள்ளார்கள்.
மேலும் யோகி பாபு ஒரு நடிகரே கிடையாது என்றும் அவர் ஒரு குப்பை என்றும் படு கேவலமான வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி பேசி இருப்பது ரசிகர்களை மட்டும் இல்லாமல் சினிமாவில் உள்ள பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யோகி பாபு பேட்டி ஒன்றில் வலைப்பேச்சு டீமில் உள்ளவர்களை மறைமுகமாக தாக்கி பேசிய நிலையில் யோகி பாபுவை நேரடியாக வலைப்பேச்சு டீம் கடுமையாக தாக்கி பேசி உள்ளது.
நெகட்டிவான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவான செய்திகளை சொல்லக்கூடாது என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று யோகி பாபு மறைமுகமாக வலைப்பேச்சு டீமை பேசி இருந்தார். இந்நிலையில் வலைப்பேச்சு டீம், நேரடியாக வீடியோ வெளியிட்டு உங்களிடம் அப்படி காசு கேட்டோமா என்று சத்தியம் செய்ய தயாரா? என்று கேட்டுள்ளனர். மேலும் யோகி பாபு தான் தங்களிடம் மனம் வருந்தி DontTouch என்று தன்னிடம் சொல்லியதாக கூறினார். அப்படி இருந்தும் நாங்கள் அந்த முன்னணி நடிகரின் பெயரை சொல்லாமல் தான் அப்போது சொன்னோம் என்று கூறியிருக்கிறார்கள்.