CINEMA
என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது…. அது நடக்குமான்னு தெரியல…. புலம்பும் வனிதா விஜயகுமார்…!!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான Mambo என்ற படத்தில் வனிதாவின் மகனான விஜய் ஸ்ரீஹரி நடித்த வருகிறார். விஜய்ஸ்ரீஹரிக்கு ஜோடியாக பிரபு சாலமனின் மகள் கோஷல் சைனி நடிக்கிறார். சிங்கத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது வனிதாவின் புலம்பலும் ஆரம்பித்துவிட்டது. அதாவது இது குறித்து பேசிய வனிதா, இது ரொம்ப மோசமான நிலைமை என்றாலும் ஒரு அம்மாவாக பெருமைப்படுகிறேன்.
என் மகன் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் போது நானும் படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன். இது போன்ற வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. என் மகனின் கண்கள் பார்ப்பதற்கு என்னுடைய கண்கள் போல் இருக்கிறது. அருண் அண்ணாவின் சாயல் இருக்கிறது. நேரில் பார்த்தால் பேச வாய்ப்பு கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கவலையோடு பேசியுள்ளார். இந்த செய்தி வந்து தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.