CINEMA
பிரியங்காவுக்கு சுயமரியாதை இல்லையா…? செருப்பை கழட்டி அடிக்கணும்…. நடிகை வனிதா ஆவேசம்…!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலைக்கும், பிரியங்காவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டதால் தொகுப்பாளர் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளார். இதற்கான காரணத்தை அவருடைய யூடியூப் சேனலில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட மீடியா பிரபலங்கள் பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் பேசிய நடிகை வனிதா, இரண்டு பெண்களுக்கு இடையே நடந்த பிரச்சினையை சோஷியல் மீடியாவுக்கு கொண்டு வந்து அசிங்கமாகிவிட்டது. பிரியங்கா நல்ல பொண்ணு. மணியும் நல்ல பொண்ணு தான். ஆனால் மணிக்கு கணவர் இருப்பதால் சுயமரியாதை இருக்கிறது என்றும், பிரியங்காவின் கணவர் விட்டுவிட்டு போய்விட்டார் என்பதற்காக அவங்களுக்கு சுயமரியாதை இல்லை என்று சொல்லுபவர்களை செருப்பை கழட்டி அடிக்கணும் என்று கோபமாக பேசியுள்ளார்.