LATEST NEWS
சிவாஜி தூக்கி வைத்திருக்கும் குழந்தை… பிரபல நடிகையா..? யாருன்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க…!!

பிரபல நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளாக பிறந்தவர் வனிதா. இவருக்கு ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற இரண்டு தங்கைகள் இருக்கின்றனர். நடிகை வனிதா விஜயகுமார் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். இதனையடுத்து ராஜ்கிரனுடன் மாணிக்கம் படத்தில் வனிதா நடித்தார்.
முன்னதாக மலையாள திரைப்படமான ஹிட்லர் பிரதர்ஸ், தெலுங்கு பக்தி கற்பனை திரைப்படமான தேவி ஆகியவற்றில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வனிதாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் மூன்றில் வனிதா என்ட்ரி கொடுத்தார்.
அதன் பிறகு அவர் எலிமினேட் செய்யப்பட்டார். அதே ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியலில் வனிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார்.
தற்போது நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 7-ல் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்று பிறகு எலிமினேட் செய்யப்பட்டார். அவ்வபோது நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகும். அந்த வகையில் நடிகை வனிதா நடிகர் திலகம் சிவாஜியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.