LATEST NEWS
சிகிச்சை முடிந்த கையோடு விஜய் ஆண்டனி போட்ட முதல் பதிவு…. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா…..????

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது இவர் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமான இவர் படத்தின் சூட்டிங் லங்காவி தீவில் நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்.
அந்த விபத்தில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் ஆரம்பகட்ட சிகிச்சை மலேசியாவில் கொடுக்கப்பட்டது. பிறகு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அண்மையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்த நிலையில் விஜய் ஆண்டனி தற்போது தனது உடல்நலம் குறித்து ஒரு பதிவை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/vijayantony/status/1621028015391248384