தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மான் கராத்தே மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் உடல் எடையை அதிகரித்ததால் பட வாய்ப்பு இல்லாமல் போன இவர் உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார். அதன் பிறகு ஒல்லியாக மாறிய இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான கத்தூரியாவின் முன்னாள் கணவர் என்பதால் இவரின் இந்த முடிவு பலரின் விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தன்னுடைய திருமணத்தை ஒரு சோட் திரைப்படமாக எடுத்து ஹன்சிகா வெளியிட்டுள்ளார். அதில் கணவரின் முன்னாள் வாழ்க்கை பற்றி தனக்கு கவலை இல்லை என்று அவர் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து தோழியின் கணவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் என பலரும் கிளப்பிய விமர்சனங்களுக்கு பதிலடியாய் அமைந்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க