VIDEOS
என்னால தாங்க முடியல, உயிரையே விற்றுவேன்.. விஜயகாந்த் உடல்நிலை குறித்து குவைத் நாட்டில் இருந்து தொண்டர் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இவருக்கு குரல்வளை பாதிக்கப்பட்டு நரம்பு தொடர்பான பிரச்சனைகளும் உள்ளன. இதற்காக பலமுறை வெளிநாடு சென்று விஜயகாந்த் சிகிச்சை பெற்றுள்ளார். இருந்தாலும் அவரது உடல் நிலையில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. பேச முடியாமல் அவதிப்பட்டு வரும் அவரால் நிற்கவும் முடியாது.
இதனால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த விஜயகாந்த் கடந்த நவம்பர் 18ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மூச்சு விட முடியாமல் திணறியதால் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிக அளவில் சளி தேங்கிய காரணத்தால் அவர்களுக்கு மூச்சு விடுவதற்கு சிரமமாக உள்ளது.
அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் விஜயகாந்தின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் இயல்பு நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கடந்த வாரம் தெரிவித்த நிலையில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள மருத்துவ நிர்வாகம் 14 நாட்கள் வரை அவர் சிகிச்சை பெற வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேசமயம் விஜயகாந்த் மூன்று நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சேர்க்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படும் நிலையில் தொண்டர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அதன்படி தமிழகத்தை சேர்ந்த விஜயகாந்தின் தொண்டர் ஒருவர் தற்போது குவைத் நாட்டில் வேலை செய்து வரும் நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அறிந்து மிகுந்த மனவேதனை உடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் விஜயகாந்தின் உடல் நிலையை சரி செய்ய எந்த உறுப்புகளையும் தான் தானம் செய்ய தயாராக இருப்பதாக கூறியும் விஜயகாந்த் ஒன்று ஏற்பட்டால் தான் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டேன் என்றும் மனம் வருந்தி பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://fb.watch/oFhKttf8mR/?mibextid=6aamW6