விஜயகாந்த் மகனா இது?…. கேஜிஎப் லுக்கில் மிரட்டும் புகைப்படம்….. வேற லெவல்….! வேற லெவல்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜயகாந்த் மகனா இது?…. கேஜிஎப் லுக்கில் மிரட்டும் புகைப்படம்….. வேற லெவல்….! வேற லெவல்….!!!

Published

on

நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள புகைப்படம். இணையத்தில் படுவைரல் ஆகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நடிப்பில் கொடிகட்டி பறந்தவர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.’கருப்பு தங்கம்’ என்று அழைக்கப்படும் இவர், அதன்பிறகு அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால். தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் இளைய மகன் சண்முக பாண்டியன் 2015 ஆம் ஆண்டு,வெளியான’ சகாப்தம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

Advertisement

தொடர்ந்து’மதுர வீரன்’ என்ற திரைப்படத்திலும் நடித்தார். இரண்டு படங்களும் அந்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. தொடர்ந்து’ தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடித்திருந்த திரைப்படமும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சண்முக பாண்டியன் தற்போது ‘மித்திரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதைத்தொடர்ந்து குற்ற பரம்பரை நாவலை தழுவி சசிகுமார் இயக்கி வரும், வெப் சீரியஸிலும் சண்முக பாண்டியன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தற்போது நடிகர் சண்முக பாண்டியன் தனது சமூக வலைதள பக்கத்தில் சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதில் கே ஜி எஃப் ஹீரோ’ யாஷ்’  கெட்டபில் நீண்ட முடி வளர்த்து, கோட் சூட்டில், இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதில் படுவைரல் ஆகி வருகின்றது.

Advertisement

இதை பார்த்த ரசிகர்கள் இது என்ன புது ப்ராஜெக்ட் ஆ லேட்டஸ்ட் லுக்கா என்று கேட்டு வருகிறார்கள். மேலும் சிலர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து ஜொலித்து வருவதை போல். நீங்களும் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in