LATEST NEWS
புது காரை காட்ட வந்த அறிமுக நடிகர்…! விஷால் செய்த செயல் அதிர்ச்சியில் திகைத்த ரசிகர்….!!!

நடிகர் விஷால் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு போன்ற படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது. இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். தயாரிப்பாளர் ஜி கே ரெட்டி விஷாலின் தந்தை ஆவார்.இவர் நடிகர் அர்ஜுன் உடன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இவர் நடிப்பில் இறுதியாக வந்த படம் எனிமி. இப்படத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அவர் லத்தி என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன .தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சமீபத்தில் தனது ரசிகர் வாங்கிய புது காரை பார்த்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் ஓரிரு படங்களின் அடித்தாலே தான் பெரிய நடிகன் என்பது போல அலட்டிக் கொள்ளும் நடிகர்களுக்கு மத்தியில் தனது ரசிகரும் புது முக நடிகருமான சோமு அவர்கள் புது கார் ஒன்றை வாங்கியதை விஷாலிடம் சென்று காட்டியுள்ளார்.
அவர் தனது வேலைகளை விட்டு விட்டு வந்து அந்த காரை பற்றி விசாரித்து புது காரை ஓட்டியும் பார்த்தார். இது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்ததாக சோமு தெரிவித்தார். இந்த சம்பவம் அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்ததாகவும் கூறியிருந்தார். இதுபோன்று தன்னைத் தேடி வந்த ரசிகனை மதிக்க தெரிந்த ஹீரோக்கள் மிகவும் குறைவு அப்படி இருக்கையில் விஷாலின் செயல் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.