LATEST NEWS
“எதுக்காக அப்படி சொல்லுறீங்க எனக்கு என்ன வயசு ஆயிடுச்சா?”…. பிரபல நடிகையை விளாசிய சமந்தாவின் Ex கணவர்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் வரை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக கூட்டறிக்கை வெளியிட்டனர். அது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவாகரத்திற்கு பிறகு இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாக சைதன்யா விவாகரத்திற்கு பிறகு மற்றொரு நடிகையை காதலித்து வருகிறார் என பல செய்திகள் அடிக்கடி இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
மறுபக்கம் நாகு சைதன்யா படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். இதனிடையே தென்னிந்திய சினிமாவில் அதிகம் ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நடிகையை கீர்த்தி செட்டி ட்விட்டர் பக்கத்தில் நாகசெய்தன்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் மரியாதைக்காக அவர் காரு என்று குறிப்பிட்டிருந்தார். அதனைப் பார்த்து பதில் அளித்த நாக சைதன்யா, எதற்காக காரு என செய்குறீங்க, எனக்கு என்ன அவ்வளவு வயசாகிடுச்சு என்று நினைக்கிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். இதனைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து அதனை வைரலாக்கி வருகிறார்கள்.
You must be the change you wish to see in the world! And @chay_akkineni garu is the perfect example! Happy birthday to one of the most humble,sweet and inspiring people I’ve ever met 🌸
looking absolutely fierce in the #firstlook poster from #custody 🔥 pic.twitter.com/NVzNrnCfoh— KrithiShetty (@IamKrithiShetty) November 23, 2022