‘ஜெய் பீம் படத்துக்கு தேசிய விருது ஏன் கிடைக்கல’… ஆதங்கத்தை வெளிப்படுத்திய இயக்குனர் சுசீந்திரன்… வைரலாகும் வீடியோ… - Cinefeeds
Connect with us

CINEMA

‘ஜெய் பீம் படத்துக்கு தேசிய விருது ஏன் கிடைக்கல’… ஆதங்கத்தை வெளிப்படுத்திய இயக்குனர் சுசீந்திரன்… வைரலாகும் வீடியோ…

Published

on

2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு 69ஆவது தேசிய விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மிகவும் எதிர்பார்த்த படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருந்தாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகை சேர்ந்தவர்கள் அதிக அளவில் விருதுகளை பெற்றுள்ளனர்.

 

தமிழ் சினிமாவில் விருது பெரும் என எதிர்பார்க்கப்பட்ட பல திரைப்படங்களுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. குறிப்பாக அமேசான் பிரைமில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம். TJ ஞானவேல் இயக்கியிருந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தில் மணிகண்டன், லிஜோமல் ஜோஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் வெளிவந்து சர்ச்சையில் சிக்கினாலும், மக்கள் அனைவரின் மனதையும் வென்றது.

இத்திரைப்படத்திற்கு விருது அறிவிக்கப்படாதது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் பிரபலங்கள் பலரும் இணையத்தில் அவர்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் ஜெய் பீம் திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்காதது குறித்து தனது ஆதங்கத்தை இணையத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ…