CRIME
“அடிப்பாவி காசுக்காக இப்படியா..?” கள்ளக்காதலனுடன் உல்லாசமா இருக்க மனைவி போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… பரபரப்பு பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தின் திபாய் பகுதியில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி, முகேஷ் என்ற 38 வயது நபர் கொலை செய்யப்பட்டு, சடலம் சாலையோர சாக்கடைக் சேற்றில் வீசப்பட்டுக் கிடந்தது. இச்சம்பவத்தை ஒரு சாலை விபத்து போலக் காட்ட முயற்சி நடந்த நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என்பது அம்பலமாகியுள்ளது. முகேஷின் மனைவி பூனம், தனது கள்ளக்காதலன் கவேந்திரா மற்றும் அவனது நண்பன் சேத்தன் ஆகியோருடன் இணைந்து இந்த கொடூரக் கொலையைச் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து, பூனம் உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
விசாரணையில், இந்த கொலைக்கு கள்ளக்காதல் விவகாரம் மட்டுமின்றி, சுமார் 12 லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகை மற்றும் குடும்பத்திற்குச் சொந்தமான நிலம் ஆகியவற்றின் மீது இருந்த பேராசையே முக்கியக் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். முகேஷுக்கு மதுப்பழக்கம் இருந்ததோடு, அவர் குடும்ப நிலத்தையும் விற்று வந்ததால் பூனம் அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பூனம், தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழவும், காப்பீட்டுப் பணத்தை அடையவும் கணவனைத் தீர்த்துக்கட்ட சதித் திட்டம் தீட்டியுள்ளார். தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் பூனமின் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த மர்மக் கொலையை போலீசார் வெற்றிகரமாகத் துலக்கியுள்ளனர்
