LATEST NEWS
“மாமா.. எனக்குத் தலைவலி தராம இங்க கையெழுத்து போடு..!” லோன் வாங்கப் பிணத்தை வங்கிக்குத் தூக்கி வந்த பெண்.. அப்புறம் நடந்த ட்விஸ்ட் பாருங்க.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
பிரேசிலில் அண்மையில் உயிரிழந்த தனது மாமாவின் பெயரில் கடனுதவி பெறுவதற்காக, அவரது உடலையே நேராக வங்கிக்கு எடுத்துச் சென்று கையெழுத்திட வைக்க முயன்ற பெண்ணின் அதிர்ச்சியூட்டும் செயல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது மாமாவின் சடலத்தை ஒரு சக்கர நாற்காலியில் அமர வைத்து வங்கிக்குக் கொண்டு வந்துள்ளார். அங்கு அவரது கையில் ஒரு பேனாவைக் கொடுத்து, “எனக்கு அதிகமாகத் தலைவலியைத் தராமல், இங்கு கையெழுத்துப் போடுங்கள்” என்று சடலத்தைப் பார்த்துக் பேசியுள்ளார். 17,000 பிரேசில் ரியால் பணத்தைப் பெறுவதற்காக அந்தப் பெண் இந்த விபரீதமான துணிகர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
امرأة تحاول سحب قرض بإسم عمها المتىوفي حديثاً منذ فأخذت جثىته للبنك وقدمت له قلم وقالت له: لا تسبب لي الكثير من الصداع، وقّع هنا.
المرأة كانت تريد 17,000 ريال برازيلي (12,000 ريال سعودي)
لاحظ الموظفون الأمر وأبلغوا الشرطة التي أتت وقبضت عليها. pic.twitter.com/j8Y4fYRSlr— حمدان 🎖 (@7ikm33) August 27, 2026
சக்கர நாற்காலியில் இருந்த முதியவரின் உடல்நிலை மற்றும் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர்கள், உடனடியாக இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த முதியவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்ததோடு, ஏமாற்ற முயன்ற அந்தப் பெண்ணைக் கையும் களவுமாகக் கைது செய்தனர். பணத்திற்காகப் பிணத்தைக் கூட வங்கிக்குக் கொண்டு வந்த அந்தப் பெண்ணின் அநாகரிக அராஜகச் செயல், சமூக வலைத்தளங்களில் பார்ப்பவர்களை உரைய வைத்துள்ளது.
