LATEST NEWS
இசையமைப்பாளர் யுவன் போட்ட ட்வீட்.. பதிலடி கொடுத்த ஆர்.கே சுரேஷ்.. எது உண்மை..? குழப்பத்தில் ரசிகர்கள்..!!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தனது 16 வயதில் அரவிந்தன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்திற்கு இசையமைத்ததன் மூலம் யுவன் சங்கர் ராஜா பிரபலமானார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கிரேட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைத்துள்ளார். முன்னதாக நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிப்பில் உருவாக உள்ள ஏழு கடல் ஏழுமலை படத்தில் யுவன் இசையமைத்த மறுபடி நீ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் ஆர்.கே சுரேஷ் தான் எழுதி இயக்கி நடிக்க போகும் தென் மாவட்டம் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். மேலும் அவர் வெளியிட்ட போஸ்டரில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த யுவன் தனது சமூக வலைதள பக்கத்தில், பத்திரிக்கை நண்பர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். ஆர்.கே சுரேஷ் குறிப்பிட்ட தென் மாவட்டம் படத்தில் பணியாற்ற வேண்டும் என யாரும் என்னை அணுகவில்லை.
நான் அந்த படத்திற்கு இசையமைக்கவில்லை. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆர்.கே சுரேஷ், வணக்கம் சார் படத்துக்கும், லைவ் இன் கான்சர்ட்டுக்கும் நீங்கள் கையெழுத்து போட்டு உள்ளீர்கள். ஒப்பந்தத்தை மீண்டும் வாசித்து பாருங்கள் என பதிவிட்டுள்ளார். இருவரும் மாறி மாறி எதிர்மறை கருத்துக்களை பதிவிடுவதால் எது உண்மை என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.