‘உண்மையில் பாட்டி தாத்தாவுடன் இருந்த காலம் சொர்கம் தான்’… பல இதயங்களை ஈர்த்த காணொளி.. – cinefeeds
Connect with us

VIDEOS

‘உண்மையில் பாட்டி தாத்தாவுடன் இருந்த காலம் சொர்கம் தான்’… பல இதயங்களை ஈர்த்த காணொளி..

Published

on

சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான உச்சகட்ட பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் தாத்தா, பாட்டி என சொல்லிவிடலாம். தாத்தா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது. பாட்டியின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகள் தான் நாம்.

தாத்தாக்களின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம். தாத்தா, பாட்டிகளும் வீட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளின் மீது உயிரையே வைத்து உள்ளனர். ஆனால் இதெல்லாம் நம் தலைமுறையும், இந்த தலைமுறையும் அனுபவித்தது. அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

காரணம், இன்று கூட்டு குடும்ப உறவுமுறையையே சிதைத்துவிட்டோம். கணவன், மனைவி தாண்டி தாத்தா, பாட்டிகளை பலரும் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கிறார்கள்.

இன்னொருபுறத்தில் இன்று கம்யூட்டர் உலகு ஆகிவிட்டது. குழந்தைகள் செல்போனிலும், மடிகணினியிலும் உலகைப் பார்க்கின்றன. இதனாலும் தாத்தா, பாட்டியின் மடியில் கிடந்து விளையாடும் வாய்ப்பை தவறவிடுகின்றனர்.

Advertisement

இதோ இங்கே ஒரு குட்டிக் குழந்தை தன் பாட்டி சமையல் வேலை செய்து கொண்டிருக்கும்போது எப்படி குறும்பாக சேட்டை செய்கிறது பாருங்கள். பாட்டியும் குழந்தையை அழகாக ராட்டினம் சுற்றுவது போல் வைத்து சுற்றிக் கொண்டு இருக்கிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in