நாங்கெல்லாம் அப்டேட் ஆகி ரொம்ப நாள் ஆச்சு.. ஆடு செய்யுற வேலையைப் பாருங்க.. மனிதர்களையே மிஞ்சிய அறிவு இது..! – cinefeeds
Connect with us

VIDEOS

நாங்கெல்லாம் அப்டேட் ஆகி ரொம்ப நாள் ஆச்சு.. ஆடு செய்யுற வேலையைப் பாருங்க.. மனிதர்களையே மிஞ்சிய அறிவு இது..!

Published

on

பொதுவாக குரங்கு, நாய், ஆடு போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ஆடு இடம்பிடிக்கிறது. வீட்டில் ஆடுகள் இருப்பது வங்கியில் பணம் இருப்பதற்குச் சமம். பலரும் தங்கள் வீடுகளில் ஆடு வளர்ப்பது இதனால் தான்!

Advertisement

இங்கேயும் ஒரு விவசாயி தனது வீட்டில் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகின்றனர். அவர் அதை வீட்டு பின்வாசலில் ஒரு கொட்டகை அமைத்து பூட்டி வைத்திருந்தார். அதில் பூட்டு போட்டு பூட்டியிருந்தார். வழக்கமாக பூட்டை மனிதர்கள் தான் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் இங்கே ஒரு ஆடே, தன் கழுத்தை வெளியில் போட்டு பூட்டைத் திறக்கிறது. தொடர்ந்து அந்த ஆடே கதவைத் திறந்து ஆடுகளை அழைத்தும் போகிறது. குறித்த இந்தக் காட்சி இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in