CINEMA
இனி வீடியோ போட மாட்டேன்…. பாடகி சுசித்ரா எடுத்த திடீர் முடிவு…!!

பிரபல பாடகி ஆன சுசித்ரா யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் இப்படி பிசியாக இருந்த சுசித்ரா கடந்த 2017 வருடம் திடீரென்று சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர்க ; பலரின் அந்தரங்க வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியானதால் திரை உலகமே அதிர்ந்தது. இதனை அடுத்து தன்னுடைய twitter கணக்கு யாரோ ஹேக் செய்து அதில் இருந்து புகைப்படத்தின் வீடியோக்களின் வெளியிட்டுவிட்டார்கள் என்று போலீசில் புகார் மனு அளித்து இருந்தார் சுசித்ரா.
அதன் பிறகு அவருக்கு மனநிலை சரியில்லை என்றும் அப்போது தகவல் பரவியது .இதனை அடுத்து சுசித்ரா தன்னுடைய கணவரிடம் இருந்து விவகாரத்தை பெற்றுக்கொண்டார். தற்போது தனியாக வசித்து வருகிறார். சுசித்ரா அவ்வப்போது ஒரு சில பிரபலங்களை பற்றி பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் இவர், மும்பையில் செட்டில் ஆக போகிறேன். அங்கு குழந்தைகளுக்கான மாத இதழ் ஒன்றில் பணியாற்ற இருக்கிறேன். அதனால் இனி youtubeல் எந்த வீடியோவும் வெளியிடமாட்டேன் என்று கூறியுள்ளார்.