Uncategorized
“சாரி சார்…” லிஃப்டில் தெரியாமல் இடித்த 14 வயது சிறுவன்.. 6 வயது தங்கை கண்ணெதிரே 54 வயது மிருகம் செய்த கொடூரம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில், லிஃப்டிற்குள் நுழையும் போது 14 வயது சிறுவன் ஒருவன் தற்செயலாக ஒரு நபரின் காலில் மோதியதற்காக, அந்த நபர் சிறுவனை கொடூரமாக அடித்துத் துவைத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காலில் மோதியவுடன் அந்தச் சிறுவன் உடனடியாக மன்னிப்புக் கேட்டுள்ளான். ஆனால், இதனால் ஆத்திரமடைந்த 54 வயதுடைய அந்த நபர், வலுக்கட்டாயமாக லிஃப்டிற்குள் புகுந்து சிறுவனைத் தாக்கியதோடு, அவனது 6 வயது தங்கையின் கண்ணெதிரே வெளியே இழுத்து வந்து மீண்டும் கொடூரமாக அடித்துள்ளார். இந்தத் தாக்குதலில் அந்தச் சிறுவனுக்குத் தலையில் பலத்த காயம் மற்றும் உடலெங்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன; அவனது தங்கை இந்த விபரீதத்தை நேரில் பார்த்து கடுமையான மன உளைச்சலுக்குஆளாகியுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அல்ல என்றும், மேல்தளத்தில் உள்ள ஒருவரைப் பார்க்க வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்திற்கு முன்பே, அந்த நபர் கட்டிடத்திற்கு வெளியே நடைபாதையைக் காலால் உதைத்துக் கொண்டு மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகச் சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார். எனவே, சிறுவன் மோதியது ஒரு சாக்குப்போக்கே தவிர, யாரிடமாவது சண்டை போட வேண்டும் என்ற வெறியில் இருந்த அந்த நபருக்கு இந்தச் சிறுவன் எளிதான இலக்காக மாறியுள்ளான். ஆரம்பத்தில் இது ‘போலீஸார் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதல்’ என வதந்திகள் பரவிய நிலையில், தற்போது அந்த 54 வயது சாதாரண குடிமகன் மீது வன்முறை மற்றும் கலவரம் விளைவித்தல் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
