Uncategorized
“அண்டப் புளுகு ஆதவ் அர்ஜுனா.. CM விஜய்க்கே தெரியாம அரசாணை வந்ததா..?” தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை வறுத்தெடுத்த திமுக பரந்தாமன்..!!
சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முதற்கட்ட ஒப்புதல் அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், “அந்த முடிவை முதலமைச்சர் விஜய் இன்னும் எடுக்கவில்லை” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது அண்டப் புளுகு என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ. பரந்தாமன் மிகக் கடுமையான பதிலடியை வழங்கியுள்ளார். வாய் திறந்தாலே பொய் பேசுவதற்கு உதாரணமாக வாழும் அமைச்சரின் லேட்டஸ்ட் பொய் இது என்றும், மாற்றம் எனப் பேச வந்தவர்கள் அண்டப் புளுகு என்பதை “ஆதவ் அர்ஜுனா புளுகு” என மாற்றிவிட்டார்களோ என்றும் அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
ரூ.1,200 கோடி மதிப்பில் 25.55 ஏக்கர் அரசு நிலத்தில், கடலோரக் குடியிருப்புப் பகுதியில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று விரிவான அரசாணை வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டிய இ. பரந்தாமன், இப்படி ஒரு ஆணை முதலமைச்சருக்கே தெரியாமல் எப்படி வர முடியும் அல்லது அவரை டம்மியாக வைத்துக்கொண்டு இயங்கும் அந்த “Super CM” சக்தி எது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கும் தவெக, மக்களை ஏமாற்றும் பொய் மூட்டைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு திமுக எந்த எல்லைக்கும் சென்று துணை நிற்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
