“அய்யய்யோ.. நடைமேடைக்கும் ரயிலுக்கும் நடுவே சிக்கிய ஆண் பயணி…” மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த ரியல் ஹீரோ.. ரயில் நிலையத்தில் அரங்கேறிய பதைபதைக்கும் நிஜத் திரில்லர்..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“அய்யய்யோ.. நடைமேடைக்கும் ரயிலுக்கும் நடுவே சிக்கிய ஆண் பயணி…” மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த ரியல் ஹீரோ.. ரயில் நிலையத்தில் அரங்கேறிய பதைபதைக்கும் நிஜத் திரில்லர்..!!

Published

on

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் அவசரமாக ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணியை அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படைகாவலர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பத்திரமாக மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்று காலை 8 மணியளவில் 7-வது நடைமேடையில் இருந்து திருச்சி நோக்கிச் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயில் மெதுவாக நகரத் தொடங்கிய வேளையில், ஆண் பயணி ஒருவர் ரயிலின் பின்புறம் இருந்த முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில் அவசரமாக ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் தவறி, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையேயான ஆபத்தான இடைவெளியில் விழுந்து ரயிலோடு இழுத்துச் செல்லப்பட்டார்.

அந்தப் பெட்டியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணி போராடிக் கொண்டிருந்ததை, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.பி.எப் 12-வது பட்டாலியனைச் சேர்ந்த காவலர் தீபக் உடனடியாகக் கவனித்தார். சிறிதும் தாமதிக்காமல் பாய்ந்து சென்ற அவர், பாய்ந்து சென்று அந்தப் பயணியைப் பிடித்து மேலே இழுத்து பத்திரமாக மீட்டு எடுத்தார். காவலர் தீபக்கின் இந்தத் துரிதமான மற்றும் துணிச்சலான செயலின் காரணமாகப் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, அந்தப் பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டது. சமயோசிதமாகச் செயல்பட்டு ஒரு உயிரைக் காத்த காவலரின் இந்தச் வீரச் செயலுக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in