Uncategorized
“அய்யோ.. காலை 6:30 மணிக்குக் கேட்ட துப்பாக்கிச் சத்தம்..!” சம்பவ இடத்திலே துடிதுடித்த 30 வயது வாலிபர்.. சிசிடிவியில் சிக்கிய பயங்கரம் காட்சி..!!
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் ஷிரூர் நகரில், கடந்த வெள்ளிக்கிழமை காலை 30 வயது இளைஞரான ஹரி கங்காவனே என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கர் நகர் அருகே காலை 6:30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. தாக்குதலில் பலத்த குண்டு காயமடைந்த ஹரி கங்காவனே, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக ஷிரூர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்தக் கொலைக் காட்சிகள் பதிவாகியுள்ளன.
துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி ரவீந்திர போசலே மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத் பாட்டீல் தலைமையிலான போலீஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். மேலும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த வெற்றுத் தோட்டாக்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தத் திட்டமிட்ட கொலை, முந்தைய பகை, கும்பல் தகராறு, அல்லது பணம் மற்றும் சொத்து விவகாரம் காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளைக் கண்டறியச் சுற்றியுள்ள கடைகள் மற்றும் சந்திப்புகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், தலைமறைவாக உள்ள கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
