அடச்சீ.. 2 மாதம் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. வீட்டுக்கு வந்ததும் கணவனின் அந்தரங்க உறுப்பைக் கடித்த மனைவி.. பரபரப்பு பிண்ணனி..!! – cinefeeds
Connect with us

Uncategorized

அடச்சீ.. 2 மாதம் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. வீட்டுக்கு வந்ததும் கணவனின் அந்தரங்க உறுப்பைக் கடித்த மனைவி.. பரபரப்பு பிண்ணனி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், காதலனுடன் இரண்டு மாதங்கள் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி, குடும்பத் தகராறில் கணவனின் அந்தரங்க உறுப்பைக் கடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் – சாதனா தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கணவரின் நண்பருடன் ஏற்பட்ட பழக்கத்தால் சாதனாவிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டு, யாரிடமும் கூறாமல் அவருடன் ஓடிவிட்டார். இரண்டு மாதங்கள் காதலனுடன் தங்கிவிட்டு சாதனா திடீரென கணவர் வீட்டுக்குத் திரும்பியபோது, கணவன் தீபக் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது இருதரப்புக்கும் இடையே பெரும் வன்முறை மோதலாக மாறியுள்ளது.

இந்தக் கொடூர மோதலின்போது, தீபக் தனது மனைவியின் தலையில் தாக்கியதோடு அவரது மூக்கையும் கடித்து சாக்கடையில் வீசியதாக சாதனா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் பேரில் போலீசார் தீபக்கைக் கைது செய்துள்ளனர். ஆனால், தீபக்கின் தாயார் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார். சாதனா பக்கத்து வீட்டு மாடியில் இருந்து குதித்து வந்து குழந்தைகளைக் கடத்த முயன்றதாகவும், அப்போது ஏற்பட்ட சண்டையில் தீபக்கின் அந்தரங்க உறுப்பை சாதனா கடித்துக் குதறியதாகவும், பின்னர் அவராகவே தலையைத் தரையில் மோதி காயம் ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறி சாதனாவுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார். இந்த பரஸ்பர புகார்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in