“ஐயோ எஜமான் உங்களுக்கு என்னாச்சு..?” மாரடைப்பால் மயங்கி விழுந்த நபர்.. ஒருநொடி கூட விலகாமல் காவல் காத்த நாய்… மனிதநேயமிக்க பேசப்போராட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ எஜமான் உங்களுக்கு என்னாச்சு..?” மாரடைப்பால் மயங்கி விழுந்த நபர்.. ஒருநொடி கூட விலகாமல் காவல் காத்த நாய்… மனிதநேயமிக்க பேசப்போராட்டம்..!!

Published

on

மகாராஷ்டிராவின் ராஜ்காட் கோட்டையில் மாரடைப்பால் உயிரிழந்த தனது உரிமையாளரின் உடலை விட்டு நீங்காமல், இறுதி வரை பின்தொடர்ந்த பாசக்கார நாயின் செயல் பார்ப்பவர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த ஜிக்னேஷ் சதாசிவ் காண்டல்கர் (35) என்பவர் தனது வளர்ப்பு நாயுடன் ராஜ்காட் கோட்டைக்கு மலையேற்றம் சென்றுள்ளார்.

கோட்டையின் உச்சியில் இருந்தபோது ஜிக்னேஷுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த நாய் தனது உரிமையாளரின் உடலின் அருகிலேயே அமர்ந்து கொண்டு, யாரையும் அருகில் நெருங்க விடாமல் நீண்ட நேரம் காவல் காத்து நின்றுள்ளது.

Advertisement

தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் ஜிக்னேஷின் உடலை மீட்டுக் கீழே கொண்டு சென்றபோது, அந்த நாய் ஒரு நொடி கூட விலகாமல் அவரது உடலுக்குப் பின்னாலேயே சோகத்துடன் பின்தொடர்ந்து நடந்து சென்றது. விலங்குகளின் மனிதநேயமிக்க இந்த பாசப் போராட்டம் சமூக வலைத்தளங்களில் பலரையும் நெகிழச் செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in