LATEST NEWS
அடிதூள்..! ரெயில்வே ஊழியர்களுக்கு மெகா தீபாவளி பரிசு… 78 நாள் சம்பளம் போனஸாக வழங்க மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..!!
மத்திய அரசு 11.4 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களின் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான அறிவிப்பின் மூலம், ரெயில்வே ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அவர்களை மேலும் ஊக்கப்படுத்தவும் இந்த போனஸ் தொகை வழங்கப்படுகிறது.
இந்த போனஸ் முடிவின் மூலம் அரசுக்கு ரூ.2,009 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது தண்டவாள பராமரிப்புப் பணி தொழிலாளர்கள், லோகோ பைலட்டுகள், ரெயில்வே கார்டுகள், நிலைய மேலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட பணியாளர்களுக்கும் வழங்கப்படும்.
