அதிர்ச்சி..! உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பேனர் வைத்தபோது நேர்ந்த கோரம்… துடிதுடித்து உயிரிழந்த 2 இளைஞர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிர்ச்சி..! உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பேனர் வைத்தபோது நேர்ந்த கோரம்… துடிதுடித்து உயிரிழந்த 2 இளைஞர்கள்..!!

Published

on

திருவள்ளூர் மாவட்டம், வாணியன் சத்திரம் பகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வாழ்த்துப் பேனர் வைக்கும் பணியின்போது நிகழ்ந்த விபத்தில், மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சோகச் சம்பவத்தில் வாணியன் சத்திரத்தைச் சேர்ந்த விரேந்தர் மற்றும் காரணி கிராமத்தைச் சேர்ந்த வேலன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

உயிரிழந்த விரேந்தர் மற்றும் வேலன் ஆகிய இருவரும் திமுக ஒன்றியச் செயலாளர் தங்கம் முரளியின் உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in