“அய்யய்யோ..” திடீரென வந்த ரூ.3,500 கோடி… வங்கி கணக்கை பார்த்ததும் அலறியடித்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்..! அடுத்து நடந்தது என்ன?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யய்யோ..” திடீரென வந்த ரூ.3,500 கோடி… வங்கி கணக்கை பார்த்ததும் அலறியடித்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்..! அடுத்து நடந்தது என்ன?!

Published

on

கேரளாவின் கொச்சி அருகே உள்ள திருப்பூணித்துறை பகுதியைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுமேஷ்குமார், தனது வங்கிக் கணக்கில் திடீரென ரூ.3,500 கோடிக்கும் மேல் பணம் வரவு வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். தனியார் வங்கி ஒன்றில் இருந்து இந்தத் தொகை தனது கணக்கிற்கு வந்திருப்பது தெரியவந்ததும், ஆரம்பத்தில் அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், பின்னர் இதனால் ஏதேனும் சட்ட சிக்கல்கள் வருமோ என்று அவர் அச்சம் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக வங்கி மேலாளரைத் தொடர்பு கொண்டு சுமேஷ்குமார் இது குறித்து விளக்கம் கேட்டார். அப்போது, வங்கித் தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது; மேலும், அன்றைய தினமே அந்தத் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, சுமேஷ்குமாரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த தவறான தொகை உடனடியாக மீட்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in