VIDEOS
ஒரு முத்த காட்சிக்கு 63 டேக் எடுத்த ஜிவி பிரகாஷ்… எந்த படத்தில் தெரியுமா?.. நீங்களே பாருங்க..!;
தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். ஏ ஆர் ரகுமான் இசையில் ஜென்டில்மேன் திரைப்படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலின் தொடக்க வரிகளை தனது மழலை குரலில் பாடியவர் இவர்தான். அங்கிருந்து இசை சிறகை விரித்து பறக்க தொடங்கியவர் வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன.
இவருக்கு எப்போதோ தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அன்னையில் தான் சூரரைப் போற்று திரைப்படத்தின் பின்னணி இசைக்காக விருது பெற்றார். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே இவரின் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பேச்சுலர்.
இந்தத் திரைப்படத்தில் திவ்யபாரதி ஹீரோயினியாக நடித்திருந்தார். அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் இருவரும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேச்சுலர் திரைப்படத்தில் முத்த காட்சிக்கு எத்தனை டேக் எடுக்கப்பட்டது என்று தொகுப்பாளர் கேட்க அதற்கு பதில் அளித்த இயக்குனர், ஒரு டேக்கில் எடுக்க வேண்டிய காட்சி அது இல்லை கொஞ்சம் தான் சுமார் 63 டேக் எடுத்தோம் என கலகலப்பாக பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
