LATEST NEWS
நான் நடிக்கவே இல்ல, பாலாவால் கதறி அழுத லைலா.. பிறகு காலில் விழுந்த சம்பவம்… இதுவரை பலரும் அறியாத தகவல்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பாலா. இவர் ஏராளமான இடம் ஹீரோக்களை உருவாக்கியுள்ளார். முதன் முதலில் சேது என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இவரின் திரை வாழ்க்கையில் நந்தா திரைப்படம் மிக முக்கியமானதாக அமைந்தது. அந்தப் படம் பாலாவுக்கு மட்டுமல்லாமல் சூர்யாவின் கெரியரிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதில் சூர்யாவுடன் ராஜ்கிரன் மற்றும் லைலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது.
அதாவது அந்த படத்தில் ஈழத்திலிருந்து வரும் அகதிகளை பற்றி நந்தா பேசியிருப்பார் பாலா. ஈழத்து பெண்ணாக லைலா நடித்திருந்த நிலையில் லைலாவுக்கோ முதலில் ஈழத் தமிழ் ஒழுங்காக பேச வரவில்லை. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டுள்ளார். இருந்தாலும் பாலா தனக்கு வேண்டியதை நடிகர் நடிகைகளிடம் இருந்து வாங்காமல் விடமாட்டார் என்பதால் பல சமயங்களில் டென்ஷனும் ஆகிவிடுவார். அதனால் லைலாவிடம் கடுமையான கோபத்தை அவர் காட்டியுள்ளார்.
இதனால் மிரண்டு போன லைலா திடீரென ஹோட்டல் ரூமுக்கு சென்று இனி என்னால் நடிக்க முடியாது என்று கூறி அழுதுள்ளார். ஆனால் உடன் இருந்தவர்கள் பாலா சிறந்த இயக்குனர் என்பதால் அவரது படத்தில் நடித்த கட்டாயம் நல்ல பெயர் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இதனால் அனைத்தையும் கொடுத்துக் கொண்டு படத்தில் நடித்து முடித்த பிறகு படத்தை பார்த்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனைப் பார்த்த லைலாவும் நானா இப்படி நடித்துள்ளேன் என்று ஆச்சரியப்பட்டுள்ளார். உடனே அருகில் இருந்த பாலாவின் காலில் விழுந்து லைலா என்னை மன்னித்து விடுங்கள் படப்பிடிப்பின் போது நீங்கள் நடந்து கொண்டதை பார்த்து உங்கள் மீது கோபத்தில் இருந்தேன், ஆனால் இப்போது நான் நன்றாக புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறது.
