LATEST NEWS
ஒரு நாளைக்கு நடிச்சா 10,000 தான் ஆனா அது பண்ணா 40,000… கார்த்தி பட நடிகை ஓபன் டாக்..!!

சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஜீவிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதனைப் போலவே சினிமாவிலும் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் இவர் நடித்து வருகின்றார்.
மிகவும் துணிச்சலான பெண்ணாக இருக்கும் இவர் எதையும் வெளிப்படையாக பேசி விடுவார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகும் போது ஒரு நாளைக்கு நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் என்று பேசப்பட்டது. ஆனால் 40 ஆயிரம் சம்பளம் பெறுவதற்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டனர்.
தயவுசெய்து என்னால் அதெல்லாம் முடியாது என்று கூறியதும் ஒரு நாளைக்கு நடிப்பதற்கு பத்தாயிரம் மட்டுமே சம்பளம் என்று கூறினார். அது தனக்கு போதும் என அந்த படத்தில் நடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.