TRENDING
குடிபோதையால் ஏற்பட்ட சோகம்…! காரில் குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பாடகி சின்மயி…! இப்ப எப்படி இருகாங்க தெரியுமா…?
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பின்னனி பாடகிகளில் ஒருவராக வளம் வந்தவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி ஆவார். இவர் சினிமாவில் பல படங்களில் பால பாடல்களை பாடியுள்ளார். இருப்பினும் இவர் இதன் மூலம் பிரபலமானதை விட பல்வேறு சர்ச்சைகளில் பிரபலம் அணைந்தது தான் அதிகம் . இந்நிலையில் இவர் ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் சூப்பர் சிங்கர் ஷோவில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார் .
இதை தொடர்ந்து சென்னையில் ஒளிப்பரப்பாகும் ஆஹா பண்பலையில் திங்கள் முதல் சனி வரை ‘ஆஹா காப்பி கிளப் போன்ற பல வானொலி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். பாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை 2014 திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்து இருப்பதாக இவர் திடீரென அறிவித்தார்.ஆனால் இவரின் கர்ப்பகால புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்யாததால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றீர்களா? என ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கினர்.
இதை தொடர்ந்து அவர் தான் கர்ப்பமான புகைப்படத்தையும் இணையத்தில் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் தனது குழந்தைகளின் புகைப்படத்தையும் அவ்வப்பொழுது இணையத்தில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், பாடகி சின்மயி அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிறு மாலை விபத்தில் சிக்கியதாக X ட்விட்டர் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். குழந்தைகளுடன் பாடகி சின்மயி காரில் சென்றபோது குடிபோதையில் ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் வந்து மோதிவிட்டதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இடித்துவிட்டு நிற்காமல் ஆட்டோ தப்பித்தும் சென்றிருக்கிறது. “நாங்கள் பத்திரமாக தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்” என்று சின்மயி இந்த ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு….
A piss drunk auto driver rammed against our car so badly that the frontal left side was smashed, at Abhiramapuram around 4 PM today.
My kids were seated on the rear seat. And stepped out safe with our nanny. I didn’t realise the extent of damage from the photo as I returned…
— Chinmayi Sripaada (@Chinmayi) October 1, 2023
