CINEMA
பிரபல பாலிவுட் நடிகருடன் காதலில் விழுந்த பூஜா ஹெக்டே..? இணையத்தில் கசிந்த தகவல்.. ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகையாக விளங்குபவர் பூஜா ஹெக்டே. இவர் விஜய்யுடன் ‘பீஸ்ட்’ மற்றும் அவரது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ (தளபதி 69) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 35 வயதாகும் பூஜா ஹெக்டேவின் திருமணம் மற்றும் காதல் குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம்.
தற்போது பாலிவுட் வட்டாரங்களில் பூஜா ஹெக்டேவின் காதல் குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது. அவர் பிரபல இந்தி நடிகர் ரோஹன் வினோத் மெஹ்ராவை காதலிப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சமீபகாலமாகப் பொது இடங்களுக்கு ஒன்றாகச் செல்வதும், அடிக்கடி சந்தித்துக் கொள்வதும் இந்த கிசுகிசுக்களுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
ரோஹன் வினோத் மெஹ்ரா, மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் வினோத் மெஹ்ராவின் மகன் ஆவார். இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாகப் பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியானாலும், இது குறித்து பூஜா ஹெக்டே தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், இவர்களின் ஜோடி குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
