CINEMA
அவர் த்ரிஷாவோடு பிஸியா இருப்பார்…நல்லது, கெட்டது என அனைத்திலும் த்ரிஷாவோடு வலம் வரும் விஜய்…விளம்பரத்துக்காக சிலர் செஞ்ச வேலை!” – விஜய் – த்ரிஷா சர்ச்சை கமெண்ட்டுக்கு யாஷிகா கொடுத்த அதிரடி விளக்கம்…!
தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் தற்போதைய ஹாட் டாப்பிக்காக வலம் வருவது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பான விவாதங்கள்தான். விஜய்யிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு வலுசேர்க்கும் விதமாக விஜய்யும் த்ரிஷாவும் பொதுநிகழ்வுகளில் ஒன்றாகவே வலம் வருவது தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராவதற்கு முன்பு ஒரு திருமண விழாவிற்கு ஜோடியாகச் சென்றது முதல், அஜித்தின் தாயார் மறைவின் போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது வரை, நல்லது கெட்டது என அனைத்திலும் இவர்கள் ஒன்றாகவே பங்கேற்று வருகின்றனர். இந்த விவகாரத்தை முன்வைத்து விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள், த்ரிஷாவின் பெயரையும் எல்லைய மீறி இழுப்பது சமூக வலைத்தளங்களில் விர்ச்சுவல் வாராக உருவெடுத்துள்ளது.
இருப்பினும், தங்களைச் சுற்றி எழும் இத்தனை விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் முதலமைச்சர் விஜய் தன் பணிகளில் கூலாக கவனம் செலுத்தி வருகிறார். இச்சூழலில், பிரபல கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த், விஜய் மற்றும் த்ரிஷா குறித்து சமூக வலைத்தளத்தில் தவறான முறையில் கமெண்ட் செய்ததாக ஒரு ஸ்க்ரீன் ஷாட் வெளியாகி காட்டுத்தீயாகப் பரவியது. அண்மையில் யாஷிகா கடற்கரையில் நடத்திய ஃபோட்டோஷூட் வீடியோவை பகிர்ந்த நபர் ஒருவர், “பொது இடத்தில் இப்படி அரைகுறை ஆடையோடு இருந்தால் முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பார்” எனக் கூற, அதற்கு யாஷிகா “அவர் த்ரிஷாவோடு பிஸியாக இருப்பார்” என்று பதிலளித்தது போல் அந்தப் போலி ஸ்க்ரீன் ஷாட் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் இதற்குத் தன் எக்ஸ் (X) பக்கத்தில் உடனடியாக விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது பரவி வரும் ஸ்க்ரீன் ஷாட் முழுக்க முழுக்கப் போலியானது என்றும், தங்களது பக்கங்களுக்குப் பிரபலம் தேடிக் கொள்வதற்காகச் சிலர் உருவாக்கிய கற்பனைக் கதை இது என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், லைக்குகளுக்காகவும் ரீச்சிற்காகவும் உருவாக்கப்படும் இது போன்ற மோசமான வதந்திகளைப் பொதுமக்கள் நம்பாமல் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே ஒருமுறை ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் தனது போலிப் படம் பரப்பப்பட்டதை சுட்டிக்காட்டிய யாஷிகா, இந்தச் சம்பவமும் அதன் தொடர்ச்சிதான் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
