CINEMA
SPB – சித்ரா பாட வேண்டிய பாட்டு…கண்ணு பட்டுடும்…வெளியே சொல்லாதீங்க திடீரென உள்ளே வந்த அறிமுக பாடகி…விளம்பரப் பாட்டுன்னு நெனச்சு போன பாடகிக்கு, ரஹ்மான் & வைரமுத்து கொடுத்த பேரதிர்ச்சி…!
தமிழ் திரையிசையின் பொற்கால அத்தியாயங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் – வைரமுத்து கூட்டணியின் பங்களிப்பு ஈடு இணையற்றது. இசைஞானி இளையராஜாவிடமிருந்து பிரிந்த பிறகு தன் வரிகளுக்குப் பொருத்தமான ஒரு புதிய இசைக் குரலைத் தேடிக் கொண்டிருந்த கவிப்பேரரசுக்கு, ‘ரோஜா’ திரைப்படம் மூலம் ரஹ்மானை அடையாளம் காட்டினார் இயக்குநர் மணிரத்னம். அன்று தொடங்கிய இந்தcombo, ‘ஓ காதல் கண்மணி’ வரை தமிழ் ரசிகர்களைத் தன் காந்தக் குரலாலும் கம்பீர இசையாலும் கட்டிப்போட்டது. மேற்கத்திய இசையின் புதுமைகளை ரஹ்மான் புகுத்தியபோது, அதற்குத் தன் அக்மார்க் தமிழ் வரிகளால் உயிர் கொடுத்தார் வைரமுத்து. குறிப்பாக, இவர்களின் கூட்டணியில் உருவான கிராமியப் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத ஆகச்சிறந்த கிளாசிக் ரகங்களாகும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக கடந்த சில வருடங்களாக இந்தக் கூட்டணி இணைந்து பணியாற்றாமல் இருப்பது ஒட்டுமொத்த இசை ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமே. ‘பொன்னியின் செல்வன்’ போன்ற பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களுக்கு ரஹ்மானின் இசையில் வைரமுத்து எழுதியிருந்தால், அதன் தரமும் ஆழமும் வேறொரு தளத்திற்குச் சென்றிருக்கும் என்பது பலரது ஆதங்கம். தற்போது ரஹ்மான் அடுத்த தலைமுறை பாடலாசிரியர்களுடன் இணைந்து சிறப்பான பாடல்களைக் கொடுத்தாலும், ரஹ்மான் – வைரமுத்து கூட்டணியில் இருந்த அந்தத் தனித்துவமான ‘ஜீவன்’ தற்போதைய பாடல்களில் சற்றே மிஸ் ஆவதாகவே கருதப்படுகிறது. இதனால், காலமும் இயற்கையும் கனிந்து இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதே சினிமா பிரியர்களின் தீராத ஆசையாக உள்ளது.
இச்சூழலில், இவர்களது ஆரம்பகால மேஜிக் குறித்து பின்னணி பாடகி அனுபமா பகிர்ந்துள்ள சுவாரசியமான நேர்காணல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தான் ஒரு விளம்பரப் பாடலுக்காகச் சென்ற இடத்தில் ரஹ்மானையும் வைரமுத்துவையும் சந்தித்ததாகவும், எஸ்பிபி – சித்ரா பாடவிருந்த ஒரு பாடலைத் தன்னை முயற்சித்துப் பார்க்கச் சொன்னதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் பாடிய விதம் பிடித்துப்போகவே, “இதை நீ வெளியே யாரிடமும் சொல்லிவிடாதே, கண்ணு பட்டுவிடும்” என்று அவர்கள் அன்போடு ரகசியம் காத்த சுவாரசியத்தை அனுபமா நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்துள்ளார். இத்தகைய ரசனையான படைப்புகள் மீண்டும் உருவாக இக்கூட்டணி மீண்டும் இணைவதே ஒரே வழி என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
