CINEMA
துபாய் அக்கவுண்ட்டுக்கு மாறும் பல கோடி சம்பளம்…சர்வதேச விதிமுறைகள் மற்றும் வரி விவகாரங்கள்.. அஜித்தின் ‘ஏகே 64’ படம் தொடங்குவதில் நீடிக்கும் சிக்கல்…அஜித்தின் ஒற்றை கண்டிஷனால் திரையுலகில் வெடித்த புதிய சர்ச்சை…!
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அஜித்குமாரின் அடுத்த படமான ‘ஏகே 64’ (AK 64) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தவம் கிடந்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித்தின் 64-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற விவாதம் தான் தற்போது திரைத்துறையின் ஹாட் டாபிக்காக உள்ளது. இந்த ரேசில் அஜித்தின் அபிமான இயக்குநர்களான வெங்கட் பிரபு, சிறுத்தை சிவா, ஏ.எல். விஜய் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய நால்வரில் ஒருவர்தான் எப்படியும் அஜித்தை இயக்கப் போகிறார்கள் என்று கோலிவுட் வட்டாரங்கள் உறுதியாகக் கூறுகின்றன. ஒருபுறம் சினிமா அப்டேட்டுகள் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்க, நடிகர் அஜித்தோ தனது தாயாரின் இறுதிச்சடங்குகளை முடித்த கையோடு, கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்பதற்காக அவசர அவசரமாக பிரான்ஸ் நாட்டுக்கு பறந்துவிட்டார். இதனால், அவரது அடுத்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகளை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தான் கவனித்து வருகிறார்.
அஜித்தின் கால்ஷீட்டை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று தமிழ் சினிமாவின் டாப் தயாரிப்பாளர்கள் பலரையும் நேரில் சந்தித்து அஜித்தின் மேனேஜரும், இயக்குநர்களும் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எப்படியோ போராடி பல கோடிகளை முதலீடு செய்யத் தயாராக இருக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அஜித்தின் படத்திற்குள் இழுத்து வந்துவிட்டாலும், அங்கே தான் ஒரு பெரிய இடியாப்பச் சிக்கல் முளைத்திருக்கிறது. அஜித் தரப்பில் இருந்து போடப்படும் ஒரு அதிரடி கண்டிஷனைக் கேட்டு, ஆவலோடு வந்த தயாரிப்பாளர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு உடனடியாக பேக் அடித்து ஓடுவதாகத் திரையுலகில் ஒரு புதிய தகவல் தீயாய் பரவி வருகிறது.
அதாவது, அஜித்திற்குப் பேசப்படும் பல கோடி ரூபாய் சம்பளத்தை இந்திய வங்கிக் கணக்கில் செலுத்தக் கூடாது என்றும், அந்த மொத்த தொகையையும் அவரது துபாய் நாட்டு வங்கிக் கணக்கில் (Dubai Account) தான் நேரடியாகச் செலுத்த வேண்டும் என்றும் கறாராகக் கூறப்படுகிறதாம். இன்றைய காலகட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையை சர்வதேச விதிமுறைகளின்படி வெளிநாட்டு அக்கவுண்ட்டிற்கு மாற்றுவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் வரி விவகாரங்களை நினைத்து தயாரிப்பாளர்கள் மொத்தமாகப் பின்வாங்கி வருவதாகப் பேச்சுக்கள் அடிபடுகிறது. அஜித்தின் இந்த ஒற்றைக் கண்டிஷன் தயாரிப்பு நிறுவனங்களை அதிர்ச்சியில் பதற வைத்துள்ளதால், ‘ஏகே 64’ படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார், அதற்குப் பணம் போடப் போகும் அந்தத் துணிச்சலான தயாரிப்பாளர் யார் என்ற கேள்விகள் விடை தெரியாமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
