“வா… அணையை சுற்றி காட்டுறேன்…” சிறுமியை அழைத்து சென்ற வாலிபர்… இன்ஸ்டா பழக்கத்தால் நடந்த கொடூரம்…. பதறிய பெற்றோர்…. பகீர் சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வா… அணையை சுற்றி காட்டுறேன்…” சிறுமியை அழைத்து சென்ற வாலிபர்… இன்ஸ்டா பழக்கத்தால் நடந்த கொடூரம்…. பதறிய பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

Published

on

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர்செக்கடி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கருப்பன் (28). இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த 17 வயது அரசுப் பள்ளி பிளஸ்-2 மாணவி ஒருவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்குள்ளும் அலைபேசி உரையாடல்கள் தொடர்ந்து நெருக்கம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், கடந்த 8-ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அந்தச் சிறுமியை, சாத்தனூர் அணையைச் சுற்றிக் காட்டுவதாக ஆசைவார்த்தை கூறித் தனது இருசக்கர வாகனத்தில் கருப்பன் கடத்திச் சென்றுள்ளார்.

அங்கு வைத்து அந்தப் பள்ளிச் சிறுமிக்குக் கருப்பன் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அன்றைய தினம் மாலையிலேயே சிறுமியை மீண்டும் பள்ளி அருகிலேயே இறக்கிவிட்டு அவர் தப்பியோடிவிட்டார். தாமதமாக வீட்டிற்கு வந்த மகளிடம் பெற்றோர் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடூரத்தைச் சிறுமி அழுதுகொண்டே விவரித்துள்ளார். இதனால் நிலைகுலைந்த பெற்றோர் உடனடியாக ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் சிறுமிகளுக்கு எதிரான போக்சோ (POCSO) வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த பெண் போலீசார், தலைமறைவாக இருந்த கருப்பனை அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in