மதுபாலாவிடம் ‘ஸாரி’ கேட்ட அந்த முதியவர்…கோவிந்த் வசந்தா இசையில் மீண்டும் ஒரு மேஜிக்…வாரணாசியில் ரகசியமாக நடந்த படப்பிடிப்பு.. ‘கருப்பு’ இந்திரன்ஸ் – மதுபாலா கூட்டணியின் ‘சின்ன சின்ன ஆசை’ பின்னணி…! – cinefeeds
Connect with us

CINEMA

மதுபாலாவிடம் ‘ஸாரி’ கேட்ட அந்த முதியவர்…கோவிந்த் வசந்தா இசையில் மீண்டும் ஒரு மேஜிக்…வாரணாசியில் ரகசியமாக நடந்த படப்பிடிப்பு.. ‘கருப்பு’ இந்திரன்ஸ் – மதுபாலா கூட்டணியின் ‘சின்ன சின்ன ஆசை’ பின்னணி…!

Published

on

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘கருப்பு’ திரைப்படம், நடிகர் சூர்யாவுக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த மாபெரும் தியேட்டரிக்கல் வெற்றியாக அமைந்து பேசுபொருளானது. இப்படத்தில் சூர்யாவின் கைகளில் நகைகளை ஒப்படைத்துவிட்டு, “எனக்கு ஜி-பே பண்ணத் தெரியாது சார்” என்று அழுதுகொண்டே கடந்து போகும் முதியவர் கதாபாத்திரத்தில் நடித்து, ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் இதயங்களையும் வென்றார் மலையாள மூத்த நடிகர் இந்திரன்ஸ். நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்து தன் யதார்த்தமான நடிப்பால் பல படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் மீது தற்போது தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

அந்த வகையில், நடிகர் இந்திரன்ஸ் மற்றும் பிரபல நடிகை மதுபாலா இணைந்து நடித்துள்ள ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. வர்ஷா வாசுதேவ் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு, தன் இசையால் இதயங்களை உருகச் செய்யும் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் முழுவதும் ஆன்மீக பூமியான வாரணாசியில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், ‘சின்ன சின்ன ஆசை’ என்ற தலைப்பு, தமிழில் மதுபாலா நடித்து மெகா ஹிட்டான ‘ரோஜா’ படத்தின் எவர்கிரீன் பாடலை நினைவூட்டுவதால், அந்தப் படத்தின் ஏதேனும் தாக்கம் இதில் இருக்குமோ என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement

முதிர் பருவத்துக் காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டிரைலரில், இந்திரன்ஸின் மென்மையான தோற்றமும், அவர் மதுபாலாவிடம் ‘ஸாரி’ கேட்கும் காட்சியும் பார்ப்பவர்களை நெகிழச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகியுள்ள இத்திரைப்படம் வரும் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘கருப்பு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்திரன்ஸின் எதார்த்தமான நடிப்பைக் காணவும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதுபாலாவின் முதிர்ச்சியான நடிப்பை ரசிக்கவும் சினிமா ஆர்வலர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in