CINEMA
நடிகை சமந்தா குறித்து பரவிய அந்த தகவல் உண்மைதான், வதந்தின்னு சொல்லி இத்தனை நாளா ஏமாத்திட்டாங்களே…? அந்த விடுப்பில் போகப் போகிறேன் என ஓபனாக சொன்ன நடிகை சமந்தா!
நடிகை சமந்தா தனது 2வது கணவர் ராஜ் நெடிமூர் உடன் இணைந்து மா இண்டி பங்காரம் என்ற தெலுங்கு படத்தை தயாரித்து அவரே கதாநாயகியாகவும் அதில் நடித்திருக்கிறார். இந்த படம் தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இந்த படம் தெலுங்கில் பெரிய வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து வருகிறது.இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். படம் வெளியான பிறகும் அவர் ரசிகர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கர்ப்பமாக இருப்பதற்கான அடையாளமும் தோற்றமும் வெளியானது. இது குறித்து இணையத்தில் தகவல் பரவியது. ஆனால் இதை பலரும் மறுத்தனர். சமந்தா கர்ப்பமாக இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த தகவலை நடிகை சமந்தா உறுதிப்படுத்தி இருக்கிறார். ஹைதராபாத்தில் நடந்த சக்சஸ் மீட்டில் நடிகை சமந்தா இதை பகிர்ந்து கொண்டார். அந்த நிகழ்வில் பேசிய நடிகை சமந்தா கூறுகையில், இன்னும் ஒரு சிறிய இடைவெளி எடுக்க போகிறேன். அதன் பிறகு நான் மீண்டும் வந்து விடுவேன். நான் இப்போது மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டும். இந்த தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சமந்தா கூறியிருக்கிறார். இதன் மூலம் நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதை அவரே உறுதி செய்து இருக்கிறார்.
