நீங்க என்ன மணிரத்னமா, ஷங்கரா? போனில் கோபமாக பேசிய இயக்குனருக்கு நோஸ்கட் விட்ட நடிகர் விஷ்ணு விஷால் – இந்த மோதலுக்கு என்ன காரணம் தெரியுமா? – cinefeeds
Connect with us

CINEMA

நீங்க என்ன மணிரத்னமா, ஷங்கரா? போனில் கோபமாக பேசிய இயக்குனருக்கு நோஸ்கட் விட்ட நடிகர் விஷ்ணு விஷால் – இந்த மோதலுக்கு என்ன காரணம் தெரியுமா?

Published

on

actor Vishnu vishal

நடிகர் விஷ்ணு விஷால் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அவரது நடிப்பில் கட்டா குஸ்தி படம் பெரிய வெற்றி பெற்ற நிலையில் மிக விரைவில் கட்டாகுஸ்தி 2ம் பாகம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து விஷால் விஷ்ணு ஆர்வமாக பங்கேற்று வருகிறார். மேலும் அவருக்கு ஆட்டோ இம்யூனோ என்ற நோய் பாதிப்பு 34 ஆண்டுகளாக இருப்பதாகவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது, எனக்கு ஒரு டைரக்டர் போன் செய்தார். போனை எடுத்ததுமே ஹலோ என்று ரொம்ப திமிராக சொல்லிவிட்டு நீங்க என்ன ரஜினியா? கமலா? சூர்யாவா? இரண்டு முறை போன் செய்தும் ஏன் எடுக்கவில்லை? என்று என்னை கேட்டு விட்டார். எனக்கு சுர்ர்ர் என்று கோபம் ஏறிவிட்டது. உடனே நானும், சார் நீங்கள் என்ன மணிரத்னம் சாரா, ஷங்கர் சாரா? இல்லை கௌதம் மேனனா? நான் ஏன் உங்கள் போனை உடனே எடுக்க வேண்டும் என்று கேட்டு விட்டேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் அப்போது கூறியிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in