CINEMA
சுப்பிரமணியாக இருந்தவர் சினிமாவில் கவுண்டமணியாக மாறியது எப்படி? 16 வயதினிலே படத்தில் கே பாக்யராஜ் செய்த சின்ன மிஸ்டேக் – கவுண்டமணிக்கு பெரிய புகழாக மாறிய விந்தை!
நடிகர் கவுண்டமணியின் உண்மையான பெயர் சுப்பிரமணி. நாடக மேடைகளில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது அடிக்கடி கவுண்டர் கொடுத்து மற்ற நடிகர்களை கிண்டல் செய்வார். அதனால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு கவுண்டர் மணி என்ற பெயர் வந்தது. அவரது திரைப் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தவர் இயக்குனர் கே பாக்யராஜ்.
இயக்குனர் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் பாக்யராஜ்தான் உதவி இயக்குனர். அதனால் பாரதிராஜாவிடம் சொல்லி கவுண்டமணிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார். பாரதிராஜா முதலில் மறுத்த நிலையில் பாக்யராஜ் தொடர்ந்து வற்புறுத்தியதால் தான் அந்த படத்தில் கூத்து வாத்தியார் கேரக்டரில் கவுண்டமணியை நடிக்க வைத்தார்.
அந்த படத்தில் டைட்டில் கார்டில் கவுண்டர் மணி என்பதற்கு பதிலாக கே பாக்யராஜ், கவுண்டமணி என்று தவறுதலாக பதிவு செய்தார். அந்த பெயரே பின்னர் தமிழ் சினிமாவில் நடிகர் கவுண்டமணிக்கு நிரந்தர அடையாளமாக மாறி பெரிய புகழை பெற்று தந்தது. கவுண்டர் மணி கவுண்டமணியானது பாக்யராஜால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
