LATEST NEWS
இவனெல்லாம் மனுஷனா..? “யாரிடமும் சொல்லக்கூடாது”.. 16 வயது மகளை மிரட்டி தந்தை செய்த காரியம்… கேட்டதும் ஆடிப்போன அத்தை… நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!!
ராஜஸ்தானில் தனது 16 வயது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது தந்தைக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 12,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. ஜலாவார் பகுதியைப் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவரின் கொடுமை தாங்காமல் அவரது மனைவியும், மகனும் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறியதால், பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையுடனும் அவரது இரண்டாவது மனைவியுடனும் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்தத் தனிமையைப் பயன்படுத்திக் கொண்ட தந்தை, சிறுமியைத் தனியறைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, “இதை யாரிடமும் சொல்லக்கூடாது” என மிரட்டித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி, இறுதியாகத் தன் அத்தையிடம் இக்கொடுமையைக் கூறியுள்ளார். உடனடியாக அவரது அத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பால்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து போக்சோ மற்றும் பிஎன்எஸ் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தந்தையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணையில் 14 சாட்சிகள் மற்றும் 27 ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் போக்சோ நீதிமன்ற நீதிபதி இந்த அதிரடி தண்டனையை வழங்கியுள்ளார்.
