LATEST NEWS
“காற்றில் பறப்பேன்…” தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறி மலையிலிருந்து குதித்த நபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!
ஆந்திரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது, இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அங்குள்ள 49 வயதுடைய போலிச் சாமிஜி ஒருவர், தமக்குக் காற்றில் பறக்கும் தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறிக்கொண்டு, அதனை மக்கள் முன்னிலையில் நிரூபிக்க முயன்றுள்ளார்.
&
HASSAS – Hindistan’da inandığı tanrının kendisini göğe yükselteceğini düşünerek uçurumdan atlayan rahip hayatını kaybetti pic.twitter.com/X22vFX3Jo7
— Rudaw Türkçe (@RudawTurkce) June 29, 2026
nbsp;
தன்னுடைய கூற்றை உண்மையெனக் காட்டுவதற்காக, ஆயிரக்கணக்கான பொதுமக்களின் முன்னிலையில் அவர் மலையிலிருந்து கீழே குதித்துள்ளார். ஆனால், அவர் குதித்த பிறகு எந்தவொரு அற்புதமும் நடக்கவில்லை; மாறாக அவர் மலையிலிருந்து நேராகக் கீழே விழுந்து, படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிந்தித்துப் பார்க்காமல் இதுபோன்ற போலி அற்புதக் கூற்றுகளைக் குருட்டுத்தனமாக நம்புவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கிறது.
