LATEST NEWS
இரவோடு இரவாக நடந்த திருப்பம்… விஜய்க்கு திடீர் ஷாக் கொடுத்த இடதுசாரிகள்… இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லையே…!!
சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகக் ( கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) ஆகிய இடதுசாரி கட்சிகள் பங்கேற்கப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள இடதுசாரி கட்சிகள், இக்கூட்டம் தவெக மற்றும் அதன் அதிகாரப்பூர்வ கூட்டணிக் கட்சிகளுக்கானது என்பதால் இந்த தேநீர் விருந்து மற்றும் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகக் கூறியுள்ளன. இந்த முடிவு புதிய அரசை அமைத்துள்ள தவெக தரப்புக்குச் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், மக்கள் நலன் சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, கூட்டணிக் கட்சிகளின் அதிகாரப்பூர்வ கூட்டத்திற்கு முன்னதாக, இடதுசாரி தலைவர்கள் முதலமைச்சர் விஜய்யைத் தனியாகச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளனர். இந்தத் தனிப்பட்ட சந்திப்பின் மூலம் தவெக அரசுக்குத் தாங்கள் வழங்கும் வெளியிலிருந்து ஆதரவு தொடரும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய பிற கூட்டணிக் கட்சிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முழுமையாகப் பங்கேற்கின்றன. சென்னை கோவளத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் வியூகங்கள் மற்றும் தவெக தலைமையிலான கூட்டணிக்குப் புதிய பெயர் வைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
