“உழைப்பவர்களுக்கு இடமில்லை, நடிப்பவர்களுக்கே இடம்” கட்சியை விட்டு விலகுகிறேன்… அதிமுக MLA ராஜவர்மன் திடீர் விலகல்.. எடப்பாடிக்கு ஷாக்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உழைப்பவர்களுக்கு இடமில்லை, நடிப்பவர்களுக்கே இடம்” கட்சியை விட்டு விலகுகிறேன்… அதிமுக MLA ராஜவர்மன் திடீர் விலகல்.. எடப்பாடிக்கு ஷாக்..!

Published

on

சாத்தூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வும், அம்மா பேரவை இணைச் செயலாளருமான ராஜவர்மன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு இடமில்லை என்றும், நடிப்பவர்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும் அவர் தனது வீடியோ பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த அதிமுகவை தற்போதைய பொதுச்செயலாளர் இ.பி.எஸ் (EPS) சீரழித்து வருவதாக அவர் சாடியுள்ளார். மேலும், பணம் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே தற்போது அதிமுகவில் இடமுண்டு என்ற கடுமையான குற்றச்சாட்டையும் ராஜவர்மன் முன்வைத்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in