LATEST NEWS
“கைது செய்யப்பட்டவங்க எங்க இருக்காங்கன்னே தெரியல” ரூ.35 கோடி பேரம் விவகாரம்.. திமுக பரபரப்பு குற்றசாட்டு…!!
தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ-விடம் ₹35 கோடி பேரம் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுக தரப்பில் முதன்முறையாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் என்.ஆர். இளங்கோ அளித்த பேட்டியில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 2 நபர்களை எங்கு வைத்துள்ளனர் என்றே தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டிய புகாரைக் காவல்துறை விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். அரசியல் காரணங்களுக்காகத் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கைத் தங்களது கட்சி சட்டப்படி எதிர்கொண்டு முறியடிக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
