வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்.. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசால் முடியுமா..? வாயை கொடுத்து வம்பில் மாட்டிய அன்புமணி… பெரும் சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்.. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசால் முடியுமா..? வாயை கொடுத்து வம்பில் மாட்டிய அன்புமணி… பெரும் சர்ச்சை..!!

Published

on

மேகதாதுவில் அணைகட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசைக் கண்டித்து தருமபுரியில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், சந்தனக்கடத்தல் வீரப்பன் குறித்துப் பேசிய கருத்து தற்பொழுது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அவர் பேசுகையில், “வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசால் முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். வீரப்பன் இருந்திருந்தால் கர்நாடகா இப்படி ஒரு அணை கட்டுவது குறித்து நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்றும், ஆனால் இன்று அவர் இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in