LATEST NEWS
“MLA-க்கள் ஜெயிலில்… உதயநிதி எங்கே?”.. திமுக உடன்பிறப்புகளை கொதிப்படைய வைத்த அந்த ஒரு விஷயம்.. திமுக-வுக்குள் வெடித்த அடுத்த அதிரடிப் புயல்..!!
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது அக்கட்சியின் தீவிர தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சொந்தக் கட்சியின் பிரதிநிதிகளுக்கே இந்த நிலை என்றால், தவெக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்காலத்தில் எவ்வாறு வலுவான போராட்டங்களை முன்னெடுப்பது என்ற கேள்வி தற்போதே உடன்பிறப்புகள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.
மறுபுறம், ஆளுங்கட்சியான தவெக-வின் செயல்பாடுகளைக் கண்டித்து எதிர்க்கட்சியான அதிமுக உடனடியாகப் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துக் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய திமுக தலைமையானது எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் கூறி நிர்வாகிகள் பலர் தங்களுக்குள் முணுமுணுத்து வருகின்றனர். இத்தகைய சூழல், எதிர்காலத்தில் கட்சியின் களப் போராட்ட வீரியத்தைக் குறைத்துவிடுமோ என்ற அச்சமும் உடன்பிறப்புகளிடையே மேலோங்கியுள்ளது.
