FLASH: 2027 பொங்கல் பரிசு… ரூ.300 கோடியை ஒதுக்கிய தமிழக அரசு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: 2027 பொங்கல் பரிசு… ரூ.300 கோடியை ஒதுக்கிய தமிழக அரசு..!!

Published

on

2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மற்றும் சேலைகளைக் கொள்முதல் செய்வதற்காகத் தமிழக அரசு ₹300 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், தவெக அரசிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்வது உறுதியாகியுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் கடைசி நேரத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டதால், தரமற்ற வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. அத்தகைய குறைபாடுகளைத் தவிர்க்கும் விதமாக, இந்த முறை பொங்கல் பண்டிகைக்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே அதற்கான கொள்முதல் மற்றும் தயாரிப்புப் பணிகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in