LATEST NEWS
BREAKING: மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்.. தமிழக முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு…!!
தமிழக முதலமைச்சரின் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று அத்தியாவசியப் பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் வரத் தேவையில்லாமல் பயன்பெறும் வகையில் இந்தச் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் அண்ணாநகர், அடையாறு, தாம்பரம், அம்பத்தூர் உட்பட 18 மண்டலங்களைச் சேர்ந்த 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் மூலமாக இப்பொருட்கள் வீடு தேடி வழங்கப்பட உள்ளன. தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் இந்த அரிய வாய்ப்பை ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
