LATEST NEWS
ஃபேமஸ் ஆகணுமா…? அதுக்காக இப்படியா பண்ணுவாங்க…! உயிரைப் பணயம் வைத்து வாலிபர் செய்த பகீர் பைக் சாகசம்..!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் லைக்குகளையும், பார்வைகளையும் பெற்று சில நொடிகள் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் இளைஞர்கள் பலர் ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வாலிபர் ஒருவர் சில நொடிகள் புகழுக்காகத் தனது உயிரையே பணயம் வைத்து மிக ஆபத்தான பைக் சாகசம் ஒன்றைச் செய்துள்ளார். இதைப் பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்து, இத்தகைய ஆபத்தான செயலைச் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த வைரல் வீடியோவில், ஒரு நபர் தரையில் குப்புறப் படுத்துக் கிடக்கிறார். அவருக்கு அருகில் மற்றொரு நபர் மோட்டார் சைக்கிளுடன் தயாராக இருக்கிறார். ஆரம்பத்தில் அவர்கள் ஏதோ சாதாரண வீடியோ எடுக்கிறார்கள் என்று தோன்றினாலும், அடுத்த சில நொடிகளில் நடக்கும் காட்சி பார்ப்பவர்களை உறைய வைக்கிறது. பைக்கில் இருக்கும் நபர், மெதுவாகத் தனது வாகனத்தை இயக்கி, தரையில் படுத்திருக்கும் நபரின் முதுகின் மீது பைக்கின் முன் சக்கரத்தை ஏற்றுகிறார். பைக்கைச் சரியாக சமநிலைப்படுத்துவது கடினம் என்பதால், பலமுறை முயற்சி செய்த பின்னரே அந்தப் சக்கரம் அவர் முதுகின் மீது ஏறி மறுபக்கம் இறங்குகிறது. சக்கரம் இறங்கியவுடன் தரையில் படுத்திருந்த நபர் உடனடியாக எழுந்து நிற்கிறார்.
இந்த வீடியோ சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ ‘@gharkekalesh’ என்ற கணக்கின் மூலம் பகிரப்பட்டு வேகமாகப் பரவி வருகிறது. இந்த சாகசத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிறிய தவறு நடந்திருந்தாலும் படுத்திருந்த நபருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும் என்றும், எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களோ அல்லது நிபுணர்களின் கண்காணிப்போ இல்லாமல் இதுபோன்ற உயிரைப் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவது முற்றிலும் முட்டாள்தனமானது என்றும் சமூக வலைத்தளவாசிகள் எச்சரித்து வருகின்றனர்.
