திடீர் ஷாக்…! செந்தில் பாலாஜி கைது செய்ய வாய்ப்பு.. செக் வைத்த காவல்துறை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீர் ஷாக்…! செந்தில் பாலாஜி கைது செய்ய வாய்ப்பு.. செக் வைத்த காவல்துறை..!!

Published

on

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க ரூ.35 கோடி பேரம் பேசிய புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவர்களது பூர்வீக வீட்டிற்குச் சென்ற தனிப்படை போலீஸார், பெற்றோரிடம் இந்தச் சம்மனை வழங்கி கையெழுத்துப் பெற்றுள்ளனர்.

வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்மனில் குறிப்பிட்டுள்ளபடி அவர்கள் ஆஜராகத் தவறும்பட்சத்தில், அடுத்தகட்டமாகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, கைது நடவடிக்கை பாயலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in